Thursday, October 17, 2019

Self confidence From Sri Ramachandra

*Self confidence from sri Ramachandra* :-

https://sridharbalaji1.blogspot.com

"
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ" எனும் நம் சடகோபரின் வாக்குக்கு இணங்க இராமபிரானிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன . அதில் ஒன்று தன்னம்பிக்கை .அதை எடுத்துக்காட்ட பல சரித்திர சம்பவங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தில் இருக்கிறது . அதனுள் ஒன்று தான் இது. தண்டகாரண்யத்தில் இலக்குமனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை கர தூடணர்களிடம் கூறுகிறாள். அதனைக் கேட்டு கொதித்தெழுந்த கர தூடணர்கள் 14,000 பேர் கொண்ட அரக்கர் படையோடு இராம லட்சுமணர்கள் இருக்கும் திசை நோக்கி போருக்கு வருகின்றனர். இராமபிரான் சீதா தேவிக்கு துணையாக இலக்குவனை பர்ணசாலையிலேயே இருக்க சொல்லி தான் தனி ஒரு மனிதனாகச் சென்று அந்த 14,000 அரக்கர்களுடன் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார்.இதனை அழகாக வேதாந்த தேசிகர் தனது மஹாவீர வைபவத்தில்
"த்விஸப்த ரக்ஷ ஸஹஸ்ர நளவந விலோலந மஹா கலப :
அஸஹாய சூர :!!!!
அநபாய ஸாஹஸ :!!! "
என் புகழ்கிறார்.
த்விஸப்த ரக்ஷ ஸஹஸ்ர :- 2*7*1000 =14,000 அரக்கர்கள்.
ஓர் மதம் கொண்ட ஆண்யானை வனத்தை எவ்வாறு சின்னாபின்னமாக்குமோ அவ்வாறு இராமன் அரக்கர்களை அழித்தான்.
*அஸஹாய சூர :- இந்த வரி தான் தன்னம்பிக்கை யின் எடுத்துக்காட்டு , ஸஹாயம் என்றால் உதவி , அஸஹாயம் எனில் உதவி நாடாமை. வேறோருவரின் உதவியை நாடாது தானே களம் புகுந்து தான் ஒருவன் எனத் தெரிந்தும் எதிர்நிற்பது ஓர் கூட்டமே என அறிந்தும் கூட மனம் தளராது சமர் செய்தல் . அதற்கு முக்கியக் காரணம் தான் கற்ற கலையை பிழையறக் கற்றல் .அந்த கலையின் மீது நம்பிக்கை கொள்ளுதல் . தகுந்த ஆச்சார்யனிடம் கற்றல் அவசியம். கற்ற கலைமேல் நம்பிக்கை வைத்தால் பயம் இருக்காது தைரியமும் கூடவே வரும் . அது தன்னம்பிக்கையை அதிகரித்து வெற்றி யை மேன்மேலும் சேகரிக்கும்.இராமனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவையில் ஒன்று "தன்னம்பிக்கை* ....
ஜய் ஸ்ரீ ராம் !!!
- பாலாஜி

No comments:

தேசிகரும் கம்பரும் - பகுதி 2

தேசிகரும் கம்பரும் சில ஒற்றுமைகள் பகுதி -2 4. * நரசிம்ம அவதாரத்தில் வியந்து நிற்றல்* :- வேதாந்த தேசிகர் :- *கஃசி தத்புத கேஸரி* என கா...