Saturday, October 12, 2019

தேசிகரும் கம்பரும் சில ஒற்றுமைகள்

                             தேசிகரும் கம்பரும்  சில ஒற்றுமைகள் :-





1. இருவரும் கவி பாடுவதில் வல்லவர் :-
வேதாந்த தேசிகர் :-
கவிதார்க்கிக ஸிம்ஹம்
கம்பர் :-
கவிச்சக்கரவர்த்தி
"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்"

 2.சடகோபர் (நம்மாழ்வார்) மேல் பற்று :-
வேதாந்த தேசிகர் :-
திருவரங்கநாதன் பாதுகை மேல் ஓரிரவில் 1000 ஸ்லோகங்கள் பாதுகா ஸஹஸ்ரம் எழுதினார். எம்பெருமானின் பாதுகையே ஸ்ரீ சடாரி அல்லவா .
கம்பர் :-
சடகோபர் அந்தாதி என 100 பாடல்கள் நம்மாழ்வார் மீது எழுதியுள்ளார்.
இருவரும் நம்மாழ்வார் மீது பெரும் பித்தானவர்கள் 🙏🏻🙇🏽

  3.வால்மீகியை புகழ்தல் :-
வேதாந்த தேசிகர் ;-
கவி சார்வபௌம: = கவிஞர்களுக்கெல்லாம் தலைவர் என வால்மீகியை சிறப்பித்துள்ளார்.(பூஸ்துதி)
கம்பர் :-
“தேவ பாடையில் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினார் உரையின் படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ!”.
முந்திய நாவினார் - ஆதிகவி என வால்மீகியை புகழ்ந்துள்ளார்.(கம்பராமாயணம்) .

அடுத்து பகுதி 2-ல் காணலாம் ...

No comments:

தேசிகரும் கம்பரும் - பகுதி 2

தேசிகரும் கம்பரும் சில ஒற்றுமைகள் பகுதி -2 4. * நரசிம்ம அவதாரத்தில் வியந்து நிற்றல்* :- வேதாந்த தேசிகர் :- *கஃசி தத்புத கேஸரி* என கா...